படைப்பியல் குறித்து நாம் சிந்திக்கிறவிடத்து தெளிவாகப் புரிகின்ற ஒவ்வொரு தானப் பரப்பும் இயல்புசார் அறிமுகத்தை நமக்குள் ஏற்படுத்துவது உண்மை. தேடல்சார் படைப்புகளை இனங்காட்ட உதவுகிற நம்மிடமிருக்கும் திரைப்படவியல்சார் அறிவு திடகாத்திரமான நிலையினை அடைவதென்பது பக்கச்சார்பு குறித்ததேயாகும். இதனை வெளிப்படையாகச் சொல்கிறவிடத்து விமர்சன நோக்கில் சிந்திப்பவர்களின் பக்கச்சார்பு என்பது தனிப்பட்ட ஈர்ப்பின்பால்பட்டது. எனவே தூய விமர்சன பாங்கு இல்லாத நிலையில், படைப்பு, கண்ணோட்டம் என்கின்ற பாங்கில் நகர்த்தப்பட அதற்கு விமர்சன முத்திரை குத்தப்படுகிறது. இதுவே தமிழ் மொழிமூல விமர்சனங்களில் இனங்காணக்கூடிய குறைபாடாகும்.Julius Caesar!
2002 ல் வெளிவந்த Biography, drama, history அல்லது war வகைக்ககுரிய படைப்பு! Julius Caesar ன் வாழ்க்கையூடாக ரோம சமுதாய பொருளாதார பரிமாணங்களை பிரதிபலிக்க முயல்கின்ற இப்படைப்பு, தொடர்ச்சியாக இழைத்து வருகின்ற தவறுகளுக்கு, தகுந்த உசாத்துணையற்ற story line காலாகிறது. படைப்பின் மேன்மையான காலம்சார் Transitional Art Direction, ஒரு அழிந்து போன நாகரிகத்தின் மிடுக்கான மொழிநடையை மீள உருவாக்கும் நளினம் மிக்க dialogue editing போன்றவற்றைப் பற்றி சிந்திக்க சிபாரிசு செய்யும் எந்தவொரு முனைப்பையும் தடுத்து முட்டுக்கட்டை போடுகின்றன வரலாற்றியல் வழுக்கள்.
படைப்பின் இயக்குனர் Uli Ede. நாயகன் Jeremy Sisto. சீசர் படைப்பின் பெரும்பகுதி பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது. யுத்தக்கள காட்சிகளில் கணிசமான பல்கேரிய காலாட்படை வீரர்கள் பங்கேற்றனர். ரோம கட்டடக்கலையை பிரதிபலிக்கும் காட்சிகள் பல, “மால்டாவில்” படமாக்கப்பட்டன. ரோமானியத்தின் replica விற்காக மட்டும் 3.7 மில்லியன் டொலர் செலவானதாகக் கூறப்படுகிறது. Gual ன் ஆட்சியாளர்களில் ஒருவராக பாத்திமேற்கும் “Heino Ferch” 2000 ஆண்டுகளுக்கு முந்தய புராதன Vercin getorix ஐ பிரதிபலிப்பதற்காக தினமும் 5 மணி நேர ஒப்பனை செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
Sulla என்கின்ற dictatorship பாத்திரம் Richard Harris இனால் எடுத்து நகர்த்தப்படுகிறது. Sulla மூலம் படைப்பின் இயக்குனர் பிரதிபலிக்க முயல்கின்ற எதிர்காலம் குறித்த யுத்த குளறுபடிகள், கனகச்சிதமாக transform செய்யப்பட Richard Harris முதற்காரணம் என்பதோடு இப்படைப்பே Richard Harris இன் இறுதி கலைமுயற்சியுமாகும். படைப்பு ஒரு விருதையும், 2 சிபாரிசுகளையும் பெற stabilize செய்யப்பட்ட கதைநகர்த்தும் நுட்பமே காரணமாகும்.
படைப்பில் பல வரலாற்றியல் தவறுகள் விடப்பட்டுள்ளன. Sulla உண்மையில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கவில்லை. வரலாற்றுண்மைகளின் படி கி.மு. 80 ல் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துகொண்ட பின் கி.மு. 78 ல் ஈரல் கோளாறினால் இறந்து போனார். Sulla வின் குறிப்புகளின்படி Sulla அணுவணுவாக இறந்து போனது தெளிவாகத் தெரிந்தாலும் படைப்பு, இருதய தாக்கத்தினால் திடீரென இறந்ததாகவே காட்டுகிறது. இது இவ்வாறிருக்க, Sulla வின் மறைவின் பின்னர் Marcus Crasus, சீசரின் எழுச்சிக்கு பொம்பியுடன் துணை போன முக்கிய நபர். இப்பாத்திரம் இறுதிவரை படைப்பில் சேர்த்துக்கொள்ளப்படவேயில்லை.
படைப்பு, சீசர் இரு தடவைகள் திருமணம் புரிந்ததாக எடுத்தியம்புகிறது. உண்மையில் சீசர் 3 தடவைகள் திருமணம் செயதமைக்கு சீசராலேயே எழுதப்பட்ட தகுந்த சான்றுகள் உள்ளன. Pompeyயின் மூன்றாவது triumph அவரது பிறந்த தினமான September 29, கி.மு. 61 ல் நிகழ்ந்த போது இதன் நோக்கம் மத்திய கிழக்கின் கடற்கொள்ளையர்களை வென்றமையாகும். அந்நிகழ்வில் X Gemina என்கிற பதாகை ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இது உண்மையில் 10வது legion ஐ பிரதிபலிக்கும் வாசகமாகும், வரலாற்றின்படி Gemina கி.மு. 59 வருடமே சீசரின் ஆளுகைக்குட்பட்டது.
உண்மையில் Cato, சீசரைவிட 7 வருடங்கள் இளமையானவர். படைப்பில் Cato பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் 59 வயதுடைய Chris Walker. சீசர் பாத்திரத்தில் நடிக்கும் Jeremyக்கோ வயது 28. மேலும் Vercin getorix கொல்லப்படுவது சிறையில் என சித்தரிக்கப்படுவது தவறானது. சீசர் ரோமிற்கு திரும்பியது கி.மு 51ம் வருடம் என்பதும் Vercin getorix மக்களால் கொல்லப்பட்டது கி.மு. 46ம் வருடம் இடம்பெற்ற சீசரது வெற்றி விழாவில் என்பதும் வரலாற்று உண்மையாகும்.
மேன்மை முயற்சிகளின் போது இயல்பாக இழைக்கப்படுகிற தவறு என்பது வேறு, வரலாற்றுத் திரிபு என்பது வேறு. படைப்பின் முதுகெலும்பான யதார்த்தவியல் சார் கதையோட்டம் என்பது வரலாற்றியல்சார் படைப்பாகுமிடத்து ஆதாரத்துடனான உசாத்துணையை அத்திவாரமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. தேடல்சார் படைப்புகளின் பாரம்பரிய மேன்மையை குலைக்கின்ற எந்தவொரு முயற்சியும் நல்ல தூர நோக்குடைய விமர்சன கர்த்தாக்களினால் அனுசரிக்கப்படமாட்டாது.


0 comments:
Post a Comment